நிதர்சனத்தை உணர்ந்து தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர் பாஜகவினர் - சஞ்சய் ராவுத் கருத்து!!

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், எதிர்கட்சியை நினைத்து பயம் இல்லை என்று கூறும் பாஜக தலைவர்கள் எதற்காக பல தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் என்று கேள்வி எழப்பியுள்ளார் சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவுத்.
 | 

பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய மூவரும், மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக பல பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர்.

எதிர்கட்சி என்ற ஒன்று இல்லவே இல்லை என்றும், அவர்கள் தேர்தலுக்கு முன்னரே தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டனர் என்றும் கிண்டலாக கூறி வரும் பாஜக தலைவர்கள் எதற்காக இத்தனை பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதை தொடர்ந்து, சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் இடம்பெற்ற தலையங்கத்தில், "எதிர்கட்சி இந்த தேர்தல் போட்டியில் இல்லை என்று குறிப்பிடும் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், நிதர்சனத்தை உணர்வதால் தான் பல பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார்" என்று எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து உரையாடிய அக்கட்சியின் தலைவர் சஞ்சய் ராவுத், "சாதாரண மக்களின் பிரச்சனைகள் குறித்து தான் எங்களது கட்சி பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டது. எனினும், அயோத்தியா வழக்கு குறித்தும், காஷ்மீர் விவகாரம் குறித்தும், மகாராஷ்டிரா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிடுவது இதுவே முதன் முறையாகும்" என்று கூறினார்.

மேலும், முதலமைச்சர் பட்னாவிஸ் - ன் 5 ஆண்டு உழைப்பிற்கான பதில் நாளை தெரிய வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP