சாத்வி சர்ச்சை பேச்சு: கண்டம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

கோட்சே தேசபக்தர் என்று மக்களவையில் சாத்வி பிரக்யா கூறியதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
 | 

பாஜக எம்.பி சாத்வி பிரக்யா கோட்சே தேசபக்தர் என மக்களவையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் சபாநாயகரிடம் கடிதம் அளித்திருந்தனர். இந்நிலையில், சாத்வி பிரக்யா பேசியது அவைக்குறிப்பில் நீக்கப்பட்டதால் அதைப்பற்றி விவாதிக்க முடியாது என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 

முன்னதாக, நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறினால் அதை பாஜக நிச்சம் கண்டிக்கும் என்றும் மகாத்மா காந்தி எங்களுக்கு வழிகாட்டும் விளக்காக இருந்தார், இனிமேலும் இருப்பார் எனவும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP