மும்பையில் தொடரும் சாலை விபத்து: பள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு!

மும்பை சாலைகளில் உள்ள குழிகளால் ஏற்படும் விபத்தில் சிக்கி 3 நாட்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

மும்பை சாலைகளில் உள்ள குழிகளால் ஏற்படும் விபத்தில் சிக்கி 3 நாட்களில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

மும்பையின் பால்கர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனை சரிசெய்ய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 25வயதுடைய பெண் மருத்துவர் ஒருவர் தனது சகோதரனுடன் ஷாபிங் செய்துவிட்டு திரும்பிய போது, பால்கர் பகுதியில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகனத்தின் சக்கரம் சிக்கியதில் பெண் மருத்துவர் சாலையில் விழுந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த டிரக்கின் டயரில் நசுங்கி அந்த பெண் உயிரிழந்துள்ளார். 

இந்த விபத்து நடந்தபோது, உள்ளூர் மக்கள் சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அந்த விபத்து வழக்கில் டிரக் ஓட்டுநர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.  

இந்நிலையில், இதேபோன்று இன்று நிகழ்ந்த விபத்தில் 56 வயதான நபர் மீது லாரி ஏறியதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் பள்ளத்தை கடக்க முயன்ற போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறுகின்றனர். 

இதுபோன்ற மனித உயிர் இழப்பைக் குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP