மீண்டும் இணைந்த பாரதிய ஜனதா - சிவ சேனா கட்சிகள்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறயுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 148 இடங்களிலும், சிவ சேனா கட்சி 126 இடங்களிலும் போட்டியிட போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
 | 

மீண்டும் இணைந்த பாரதிய ஜனதா - சிவ சேனா கட்சிகள்

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறயுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 148 இடங்களிலும், சிவ சேனா கட்சி 126 இடங்களிலும் போட்டியிட போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21 அன்று அந்த மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதா - சிவ சேனா கட்சிகளின் கூட்டணி உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. நடைபெற உள்ள தேர்தலில், 288 இடங்களில் 120 இடங்களையே பாரதிய ஜனதா கட்சி சிவ சேனாவிற்கு ஒதுக்கியுள்ளதால், உத்தவ் தாக்கரே அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்களுக்கு இடையே இருந்து வந்த விரிசல் சரியாகி, பாரதிய ஜனதா கட்சி 148 இடங்களிலும், சிவ சேனா கட்சி 126 இடங்களிலும் போட்டியிட போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் குறிப்பிடுகையில், "எங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் வந்தாலும், நாங்கள் ஒன்றினைந்து செயல்படவே விரும்புகிறோம்.  உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே நிச்சயம் வெற்றி பெறுவார் என நாங்கள் நம்புகிறோம் " எனக் கூறியுள்ளார்.

அக்டோபர் 21 அன்று நடைபெறவுள்ள தேர்தலுக்கான முடிவுகள் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டின் தேர்தலில், பாஜக மற்றும் சிவ சேனா கட்சிகள் தனித்தே போட்டியிட்டனர் என்பதும், தேர்தலுக்கு பின்னர் தான் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP