உண்மையான வரலாற்றை படித்து, புதிதாக வரலாறு படைப்போம்!

ஒளரங்கசிப் மட்டும் அல்ல இந்தியாவை ஆண்ட அனைத்து மன்னர்களும் இப்படித்தான் இருந்தார்கள். 17, 18ம் ஆம் நுாற்றாண்டில் ஐரோப்பா நாடுகள் இந்தியாவில் இருந்து தான் பெரும்பாலான பொருட்களை இறக்குமதி செய்தனர். ஐரோப்பாவின் தொழிற்புரட்சி வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்ட ரீதியில், இந்தியாவின் கைவினைக் கலைஞர்கள் அழிக்கப்பட்டனர்
 | 

உண்மையான வரலாற்றை படித்து, புதிதாக வரலாறு படைப்போம்!

வீரம் மிக்க சமுதாயம் உருவாக, பாரம்பரியத்தை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்காகத்தான் வரலாற்றுப் பாடம் பள்ளிகளில் சொல்லித் தரப்பட்டது. நம்ம ஊர் வரலாறு வெறும் எண்களின் குவியலாகவும், நம்மை ஆண்டவர்களின் வீரம் தீரம் பேசுவதாகத்தான் இருக்கிறது. 

கட்டமொம்மன், பாரதியார், வ.உ.சி போன்றவர்களின் வீரத்தை பாடங்களில் அறிந்து கொண்டதை விட கடந்த தலைமுறை சிவாஜியின் படத்தில் அறிந்தது தான் அதிகம். இந்த தலைமுறைக்கு அதுவும் கூட கிடைக்கவில்லை.

இந்த நாடு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு 4000 ஆண்டுகள் பழமையானது. கிறிஸ்து தோன்றி 2019 ஆண்டு தான் ஆகிறது என்பதன் மூலம் இது எவ்வளவு பழமையான நாடு என்று உணர்ந்து கொள்ள முடியும்.

ஏசு பிறந்து 800 ஆண்டுகள் கழித்து இந்தியாவில் அரேபியர்கள் வரத் தொடங்கினார்கள். அப்போது இருந்தே இந்தியாவின் சிறு சிறு பகுதிகளில் வெளிநாட்டினருக்கு அடிமையாகத்தான் இருந்தார்கள். இது ஆங்கிலேயேர்கள் ஆட்சியில் முழுமையனா அடிமைக் கூட்டமாக மாறிவிட்டது. 8ம் நுாற்றாண்டுகள் தொடங்கி 1947 வரை அடிமை ராஜியமாக இருந்தது இந்த தேசம். 

சுமார் 72 ஆண்டாகதான் சுந்திரக் காற்றை சுவாசிக்கிறோம். இந்தனை ஆண்டுகள் அடிமைத் தனத்தில் இழந்தவற்றை யெல்லாம் சுந்திர இந்தியாவில் படிப்படியாக சரி செய்து வருகிறோம்.

இப்போதுதான் வீதியில் குப்பை போடக்கூடாது என்றும், திறந்த வெளியில் மலம் கழிக்க கூடாது என்றும் நாட்டு மக்களுக்கு நல்லறிவு புகட்டி வருகிறோம். இன்னொருபுறம் ராக்கெட் விடுகிறோமே என்று கேட்டால், அதில் அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பு வெகு சொற்பம் தான்.

நம்முடைய வரலாறு தெரியாத காரணத்தால் தான், அறிவுசார் அடிமைகளாக வாழ்கிறோம். இதை போக்க வேண்டும் என்ற விவாதம் இப்போது தொடங்கி உள்ளது.

கடந்த ஆண்டு உட்சா பட்னாயக் மேற்கொண்ட ஒரு ஆய்வில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து 45 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதாரத்தை எடுத்து(கொள்ளை) சென்றதாக குறிப்பிட்டு இருந்தார். 45 லட்சம் கோடி ரூபாய்களை ஆங்கியேர்களிடம் மட்டும் இழந்துள்ளோம் என்ற உண்மை, பெரும்பாலானவர்களை உலுக்கியது. 

இதை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் மூத்த தலைவர் இருள் சூழ்ந்த சகாப்தம் என்ற நுாலில் ஆங்கிலேயர்களால் இந்தியர்கள் பட்ட துன்பங்கள், துயரங்களை விளக்கமாக எழுதி இருந்தார். அதில் இந்திய நெசவாளர்கள் பட்ட சிரமங்கள் கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது. அந்த காலகட்டத்தில், 20 கஜம் நீளமும், ஒரு முறம் அகலமும் கொண்ட மஸ்லின் துணி, மோதிரத்தின் உள்ளே சென்று வருமாம். இந்த அளவிற்கு திறன் மிகுந்த நெசவாளர்கள் அழித்து ஒழிக்கப்பட்டனர்.

மஸ்லின் பற்றிய மற்றொரு செவி வழி செய்தி உண்டு. ஒளரங்கசிப் அரசவையில்  இருந்த போது அவர் மகள் நிர்வாணமாக அங்கு வந்தாள். அதிர்ச்சியடைந்த மன்னர் நிர்வாணமாக நீ இங்கு எப்படி வரலாம் என்று அரசவையே கிடுகிடுக்கும் வகையில் கர்ஜித்தார். 

சிறிதும் அச்சப்படாமல் அந்த பெண் இல்லை மன்னா இதோ ஆடை அணிந்து இருக்கிறேன் என்று மஸ்லின் ஆடையை எடுத்துக்காட்டினாராம். உடனே அந்த நெசவாளியை அழைத்து அவரின் கட்டை விரலை வெட்டினாராம். இவ்வாறு அந்த கதை கூறப்படும். 

ஒளரங்கசிப் மட்டும் அல்ல இந்தியாவை ஆண்ட அனைத்து மன்னர்களும் இப்படித்தான் இருந்தார்கள். 17, 18ம் ஆம் நுாற்றாண்டில் ஐரோப்பா நாடுகள் இந்தியாவில் இருந்து தான் பெரும்பாலான பொருட்களை இறக்குமதி செய்தனர். ஐரோப்பாவின் தொழிற்புரட்சி வெற்றி பெற வேண்டும் என்று திட்டமிட்ட ரீதியில், இந்தியாவின் கைவினைக் கலைஞர்கள் அழிக்கப்பட்டனர்.

இது போன்ற சம்பவங்கள் வரலாற்று பாடமாக இருக்க வேண்டும். ஆனால் இங்கு வெல்லிங்டன் பிரபு என்று கருணை கொண்ட கார்ன் வாலிஸ் என்று தான் படிக்கிறோம்.

அதற்கு முன்பு நம்மை ஆண்டவர்களை கூட உண்மை வரலாறு எழுதுவதற்கு மதம் தடையாக இருந்த காரணத்தால் அனைவரும் இந்தியாவின் கடவுள்களாக அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

இதன் காரணமாகதான் வெள்ளைக் காரன் ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்காது என்று கடந்த தலைமுறை வரை கூறுபவர்கள் வாழ்ந்தார்கள். ஒரு கட்சியே ஆங்கிலேயர்கள் ஆட்சியை விட்டு போன போது கண்ணீர் விட்டு கதறியது.

கடந்த கால இந்தியாவிற்கும் தற்கால இந்தியாவிற்கும் மிகப் பெரிய வேறு பாடு உருவாகி வருகிறது. இப்போது இந்தியாவின் கருத்து இந்த விஷயத்தில் என்னவாக இருக்கிறது என்று உலகம் பார்க்கத் தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் சிலிகான் வேலியில் தயிர்சாதம் விற்கும் அளவிற்கு இந்தியர்கள் ஆளுமை ஏற்பட்டுள்ளது. 

இதைத்தவிர உலகின் அனைத்து கண்டங்களுக்கும் இந்தியர்கள் எல்லா தொழிலிலும் ஈடுபடத் தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் நம் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கூட அங்கு அதே வேலைக்கு செல்லும் வாய்ப்பு வரலாம். இலங்கையில் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் நம்மவர்கள் என்கிற போது; எதிர்காலத்திலும் இதே நிலை உருவாகலாம்.

இப்படி உலக நாடுகள் முழுவதும் இந்தியர்கள் கம்பீரமாக வளம் வரும் போது, இந்தியாவில் மட்டும் அதற்கான அடையாளமே இல்லாமல் இருக்கிறது. அதை மாற்ற வேண்டியதற்கான முதற்படி, நாம் வரலாற்றை உண்மையாக தெரிந்து கொள்ளுவது தான். 

அது நம் வரலாற்று ஆசிரியர்களிடம் தான் உள்ளது. அவர்களை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டிய கடமை நம் அரசிடம் உள்ளது. அதை செய்ய வேண்டிய காலம் இது. இந்தியாவின் வரலாற்றை புதிதாக படைப்போம். இளைஞர்களை நம்பிக்கையாளர்களாக மாற்ற வேண்டியது இந்த தலைமுறையின் கடமை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP