ரங்கீலா நாயகியின் அடுத்த ஆட்டம்.. காங்கிரஸிலிருந்து தாவினார் மடோத்கர்!

பாலிவுட் நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஊர்மிளா மடோத்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 | 

ரங்கீலா நாயகியின் அடுத்த ஆட்டம்.. காங்கிரஸிலிருந்து தாவினார் மடோத்கர்!

பாலிவுட் நடிகையாக இருந்து அரசி யல்வாதியாக மாறிய ஊர்மிளா மடோத்கர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகையான ஊர்மிளா மடோத்கர் தனது கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில் காங்கிரசில் இணைந்த 5 மாதங்களே ஆன நிலையில், கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-"மும்பை காங்கிரசில் ஒரு பெரிய குறிக்கோளைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக, உள் கட்சி பூசலை எதிர்த்துப் போராடுவதற்கான சூழல் நிலவி வருகிறது. எனது அரசியல் மற்றும் சமூக உணர்வுகள் உட்கட்சி அரசியல் காரணமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது.  

கடந்த மே 16ஆம் தேதியன்று மு ம்பை  முன்னாள் காங்கி ரஸ் தலைவர் மி லி ந்த் தியோராவுக்கு நான்  எழுதி ய கடிதம் தொ டர்பாக அவர்  எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக யாரைப்பற்றி கடி தத்தில் புகார் தெரிவித்திருந்தேனோ, அ வர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு மேலும் கூடுதல் பதவிகளை வழ ங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.  

   கடந்த மக்களவை தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் கா ங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட  ஊர்மிளா மடோத்கர்   பாஜக-வின் கோபால் ஷெட்டியிடம் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

   

   

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP