ராகுலின் நண்பரான காங்கிரஸ் தலைவர் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தார்

ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
 | 

ராகுலின் நண்பரான காங்கிரஸ் தலைவர் ஆம்ஆத்மி கட்சியில் இணைந்தார்

ஜாம்ஷெட்பூரின் முன்னாள் எம்பி மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அஜய் குமார் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

ராகுல் காந்தியின் நண்பரான இவர் ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்துள்ளார். இவர் மீது சமீபத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினர்.  இதனால், அதிருப்தியடைந்த அவர் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கட்சியில் இருந்து வெளியேறினார். அதை தொடர்ந்து, இன்று அவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

கட்சியில் இருந்து விலகப் போவதாக ராகுல் காந்திக்கு அவர் அனுப்பிய ராஜினாமா கடிதத்தில்,"நான் எந்த தவறும் செய்யாத நிலையில், என் மீது ஊழல் குற்றச்சாட்டு வைப்பதை என்னால் ஏற்க முடியவில்லை. எனவே, நான் என் பதவியை விட்டு நீங்கிக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

துணிச்சலான மனிதருக்கான சாதனை பெற்ற முதல் இளம் ஐபிஎஸ் அதிகாரி அஜய் குமார் என்று குறிப்பிட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி அஜய் குமாரை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக தெரிவித்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP