மத்திய அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்கவில்லையா ராகுல் காந்தி ??

இந்திய பொருளாதார சரிவு நிலைக்கு மத்திய அரசும், மோடியும் தான் காரணம் என்று கருத்து தெரிவித்து வந்த காங்கிரஸ் கட்சி, பாஜகவிற்கு எதிராக வரும் நவம்பர் மாதம் பேரணி மேற்கொள்ள உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் இந்தோனேசிய பயணம் அரசியல் உலகில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 | 

இந்திய பொருளாதாரம் மந்தமடைந்துள்ள நிலைக்கு மத்திய அரசை குற்றம் சாட்டிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும், வரும் நவம்பர் மாதத்தின் 1 முதல் 15 தேதி வரை பேரணியில் ஈடுபட முடிவு செய்திருந்தது. இதை தொடர்ந்து, பல செய்தியாளர்களையும் சந்திக்கவிருந்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, தற்போது தியான பயிற்சிக்காக இந்தோனேசிய பயணம் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள போதும், பேரணி குறித்த அறிவுரைகளை அவர் வழங்கி கொண்டுதான் இருக்கிறார் என அக்கட்சியின் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜீவாலா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலின் போதும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் பாங்காக் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பதால், கட்சியின் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவர், முக்கியமான தருணங்களில் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வது அரசியல் உலகில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP