ராகுல் காந்தி, ஷரத் பவார் இருவரும் ஒரு சில விஷயங்களை உணர்ந்து செயல்பட வேண்டும் - அமித் ஷா எச்சரிக்கை!!

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றதில், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கும் இடையே அதிருப்தியான சூழல் நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இதில் யார் பக்கம் என்று கேள்வியெழுப்பியுள்ளார் அமித் ஷா.
 | 

ராகுல் காந்தி, ஷரத் பவார் இருவரும் ஒரு சில விஷயங்களை உணர்ந்து செயல்பட வேண்டும் - அமித் ஷா எச்சரிக்கை!!

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றதில், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கும் இடையே அதிருப்தியான சூழல் நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இதில் யார் பக்கம் என்று கேள்வியெழுப்பியுள்ளார் அமித் ஷா.

மகாராஷ்டிரா மாநிலத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில சங்கலி நகரில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  "ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதால், இனி இந்தியாவின் பிற மாநிலங்கள் பெறும் அனைத்து நன்மைகளையும் காஷ்மீரும் பெரும். காஷ்மீரின் நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடனே பிரதமர் மோடி இந்த முடிவை எடுத்துள்ளார். 

இந்த தீர்மானத்தின் மூலம், இந்தியாவின் பாதுகாப்பையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். இப்போது சர்வதேச நாடுகள் அனைத்திற்கும் நன்றாக தெரியும், இந்திய ராணுவ வீரர் ஒருவரின் மரணம் 10 பகையாளிகளின் மரணத்திற்கு காரணமாக அமையும் என்று. எனினும், எதிர்கட்சி உறுப்பினர்களான ராகுல் காந்தி மற்றும் ஷரத் பவாரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி, அம்மாநிலத்திற்காக என்ன செய்திருக்கிறது என்று கேள்வியெழுப்பி, இதற்கான பதிலையும் பதிவு செய்யுமாறு ஷரத் பவாரிடம் கிண்டலாக கூறியுள்ளார் அமித் ஷா.

மஹாராஷ்டிரா மாநிலம், நாசிக் நகரில், கடந்த செப் 19., அன்று, தேர்தல் பிரச்சாரத்தின் போது உரையாற்றிய பிரதமர் மோடி, "ஷரத் பவார் போன்ற அனுபவம் நிறைந்த தலைவர், பாகிஸ்தானை விரும்புவதாக கூறுவது வேடிக்கையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ஷரத், இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த நான் இப்படிப்பட்ட கருத்துக்களை என்றும் கூற மாட்டேன். பாகிஸ்தான் தலைவர்கள், அரசியல் லாபத்திற்காக, இந்தியாவை குறித்த தவறான விஷயங்களை அந்நாட்டு மக்களிடம் செலுத்த முயற்ச்சிக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியுடன் ஒரு முறை பாகிஸ்தான் சென்ற போது, இந்தியாவின் மீது அந்நாட்டு மக்கள் கொண்டிருந்த அன்பு என்னை வியக்க வைத்தது" என்று தான் நான் குறிப்பிட்டேன் என்று விளக்கமளித்திருந்தார். 

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP