முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மறுக்கிறது பாஜக - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறயுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சி முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
 | 

முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மறுக்கிறது பாஜக - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சி முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில், வரும் அக்டோபர் 21 அன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இரு பெரும் கட்சிகளான, பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

மகாராஷ்டிரா மாநிலம் அவ்சா நகரில், மக்களை சந்தித்த, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "இந்தியாவில் இளைஞர்கள் வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையில், நிலவின் ஆராய்ச்சி குறித்தே மத்திய அரசின் சிந்தனைகள் உள்ளன. சீன அதிபரை சந்தித்த பிரதமர், டோக்லாம் விவகாரம் குறித்தோ, இந்திய எல்லை பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி ஊடுறுவல்கள் மேற்கொண்டதை குறித்தோ, அவரிடம் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. இவர்கள் மக்களின் நலனில் அக்கறையுடன்  செயல்படுகின்றனரா" என்று பாஜக அரசையும், பிரதமர் நரேந்திர மோடியையும் குற்றஞ்சாட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP