மகாராஷ்டிராவில் ஏற்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை - மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பாஜக-என்.சி.பி கூட்டணி ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் விசாரணைகளை தொடர்ந்து, இன்று மக்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் ஏற்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என்று கூறியுள்ளார்.
 | 

கடந்த சனிக்கிழமையன்று காலை ஆளுநர் முன்னிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்தது பாரதிய ஜனதா கட்சி. இதை தொடர்ந்து, பாஜகவிற்கும் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கும் எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது மஹா விகாஸ் அகாதி கூட்டணி. 

இதனிடையில், நம்பிக்கை வாக்கெடுப்பு மேற்கொள்ளுமாறு சிவசேனா கூட்டணி கட்சிகளால் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை தொடர்ந்து, நேற்றும் இன்றுமாக இரண்டு நாட்கள் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டிருந்த உச்ச நீதிமன்றம், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பாஜகவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தது தொடர்பான ஆதரங்களை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை தொடர்ந்து, இன்று அனைத்து ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

இதை தொடர்ந்து, இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடரில் மக்களவையில் கேள்வி நேரத்தின் போது உரையாடிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை என்றும், இதற்கு மேல் கூறுவதற்கு ஒன்றுமே இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP