ரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..!

மகள் திருமணத்திற்காக அழைப்பு விடுத்த ரிக்ஷா தொழிலாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. திருமணம் நடைபெறுவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக மணமக்களுக்கும், மங்கல்வேத் குடும்பத்தினருக்கு மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் மோடி.
 | 

ரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..!

மகள் திருமணத்திற்காக அழைப்பு விடுத்த ரிக்‌ஷா தொழிலாளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 

அண்மையில் தனது சொந்த நாடாளுமன்ற தொகுதியான வாரணாசிக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஒருநாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.வாரணாசியில் ரிக்‌ஷா தொழிலாளியாக இருந்து வரும் மங்கல்வேத் என்பவரை பிரதமர் மோடி சந்தித்தார். அந்த சந்திப்பின் போது தனது மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகவும், அதற்கு அவசியம் வரவேண்டும் என மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார் மங்கல் வேத்.

                                               ரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..!

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12ம் தேதி தொழிலாளியின் மகளுக்கு சிறப்பாக திருமணம் நடந்தது. ஆனால் மோடியால் திருமணத்திற்கு வர இயலவில்லை. ஆனால் மங்கல்வேத் குடும்பத்தினர் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஒரு இன்பதிர்ச்சியை அளித்தார் பிரதமர்.
அதனுடைய விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளன. திருமணம் நடைபெறுவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக மணமக்களுக்கும், மங்கல்வேத் குடும்பத்தினருக்கு மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் மோடி. அதில், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர், மங்கல்வேத்தின் சமூக பணிகள் தொடர்ந்து சிறக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகராக தன்னை வெளிப்படுத்துக் கொள்ளும் மங்கல்வேத், சொந்த செலவில் தனது கிராம பகுதியில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார். தனது சொந்த பணத்தில் கங்கை நதிக்கரையை சுத்தம் செய்து பொதுமக்களிடையே பாராட்டுக்களையும் அவர் பெற்றுள்ளார்.  

                                               ரிக்‌ஷா தொழிலாளி மகள் திருமணத்தில் இன்பதிர்ச்சி கொடுத்த பிரதமர் மோடி..!

பாஜக கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்து வரும் மங்கல்வேத், மோடி அனுப்பிய வாழ்த்து மடல் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மகளுக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டவுடன் அதற்கான முதல் பத்திரிக்கையை பிரதமர் மோடிக்கு தர விரும்பியதாகவும், அந்த கோரிக்கையை பிரதமர் அலுவலகம் ஏற்று மோடியை சந்திக்க வாய்ப்பு அளித்தது. திருமணத்திற்கு பிரதமர் மோடியால் வர இயலவில்லை என்றாலும், அவரிடமிருந்து கிடைத்த வாழ்த்துச் செய்தி மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP