நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடிக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு!

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று இரவு நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு, பொதுமக்கள், பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 | 

கடந்த 21ம் தேதி இங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்ற பிரதமர் மோடி, அங்கு எரிசக்தி துறையினருடன் பேச்சு நடத்தி, இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, டெக்ஸாஸில் நடந்த ஹௌடி மோடி நிகழ்ச்சியில், 50 வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். அதில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்பும் கலந்து கொண்டார். 

இதையடுத்து ஐ.நா., சபை கூட்டத்தில் உரையாற்றிய மோடி, அங்கிருந்து, இன்று இரவு டெல்லி வந்தடைந்தார். ஆயிரக்கணக்கானோர், டெல்லி விமான நிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்கள் மத்தியில் பேசிய மோடி, அமெரிக்காவில் தனக்கு மிகுந்த மரியாதையை கிடைத்ததாகவும், அது 130 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த மரியாதையை எனவும் கூறினார். 

பின் அங்கிருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, பிரதமர் நரேந்திர மோடி காரில் புறப்பட்டு சென்றார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP