மகாராஷ்டிராவில் நவம்பர் 7க்கு பின்னர் ஜனாதிபதி ஆட்சியா??

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்தும், முதலமைச்சர் பதவியில் யார் அமர்வது என்று பாஜக-சிவசேனா கட்சிகளுக்குள் கடும் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், வரும் நவம்பர் 7ஆம் தேதிக்குள் முதலமைச்சர் யார் என்பது முடிசெய்படவில்லையெனில் ஜனாதிபதி ஆட்சி அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார் முகந்திவார்.
 | 

மகாராஷ்டிராவில் நவம்பர் 7க்கு பின்னர் ஜனாதிபதி ஆட்சியா??

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்தும், முதலமைச்சர் பதவியில் யார் அமர்வது என்று பாஜக-சிவசேனா கட்சிகளுக்குள் கடும் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், வரும் நவம்பர் 7ஆம் தேதிக்குள் முதலமைச்சர் யார் என்பது முடிசெய்படவில்லையெனில் ஜனாதிபதி ஆட்சி அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார் சுதிர் முகந்திவார்.

மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி கட்சி வெற்றிபெற்றிருக்கும் நிலையில், முதலமைச்சர் பதவியை 2.5 ஆண்டுகளாக பங்கிட்டு ஆட்சி புரிய வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளனர் சிவசேனா கட்சியினர். 

சிவசேனாவின் இந்த கருத்தை காட்டிலும், அவர்கள் ஆட்சியில் அமர்த்த முடிவு செய்திருப்பது அரசியலில் முதல் முறை கால் பதித்திருக்கும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே என்பதால் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது பாஜக.

இதை தொடர்ந்து, தேர்தலில் வெற்றிபெற்று ஒரு வாரம் ஆகியும், இன்னும் முதலமைச்சர் யார் என்பதை அவர்கள் முடிவு செய்யாத நிலையில், வரும் 7 ஆம் தேதிக்குள் ஆட்சி அமைப்பது குறித்த முடிவுக்கு இருவரும் வரவில்லையெனில் ஜனாதிபதி ஆட்சி அமைப்பது தான் ஒரே வழி என்று கூறியுள்ளார் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அம்மாநில நிதித்துறை அமைச்சரும், பாஜக கட்சி தலைவருமான சுதிர் முகந்திவார்.

மேலும், சிவசேனாவின் கருத்துக்கு சம்மதம் தெரிவிக்குமா பாஜக என்ற கேள்விக்கு, தேவேந்திர பட்னாவிஸ் தான் பாஜகவின் தேர்வு என்று குறிப்பிட்டுள்ள முகந்திவார், ஆட்சியை இயன்ற வரையில் விரைவாக அமைக்க வேண்டும் என்பது தான் இரு கட்சிகளின் விருப்பம் என்றும் கூறியுள்ளார்.

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP