ஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்?

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 142 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
 | 

ஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்?

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 142 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் சந்திரபாபு நாயுடுவின் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி 28 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.

இதன்மூலம் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும், மக்களவை தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் - 24, தெலுங்கு தேசம் 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது
இரண்டு தேர்தல்களிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதால், அக்கட்சியினர் கட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP