வாரணாசியில் போட்டியிடாதது ஏன்? - பிரியங்கா வத்ரா பதில்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நான் ஒரேயொரு தொகுதியில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், மற்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் அதிருப்தி அடையக் கூடும் என்றார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா வத்ரா.
 | 

வாரணாசியில் போட்டியிடாதது ஏன்? - பிரியங்கா வத்ரா பதில்

பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் போட்டியிடாதது ஏன் என்ற கேள்விக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா பதில் அளித்துள்ளார்.

முன்னதாக, பிரதமர் மோடிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில், வாராணாசி தொகுதியில் பிரியங்கா வத்ராவை காங்கிரஸ் களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தன. கட்சித் தலைமை விரும்பினால் போட்டியிடத் தயார் என்று பிரியங்காவும் கூறியிருந்தார். இந்நிலையில், திடீர் திருப்பமாக வாரணாசி தொகுதிக்கு வேறொரு வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்தது.

இதுதொடர்பான கேள்விக்கு பிரியங்கா வத்ரா பதில் அளிக்கையில், “காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உத்தரப் பிரதேச மாநில நிர்வாகிகளின் ஆலோசனைகளைக் கேட்டறிந்தேன். இந்த மாநிலத்தில் 41 தொகுதிகளுக்கான பொறுப்பு என்னிடம் இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். இந்நிலையில், நான் ஒரேயொரு தொகுதியில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால், மற்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் அதிருப்தி அடையக் கூடும் என்றார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP