மேற்குவங்கம் காங்- திரிணாமுல் காங் கடும் மோதல்: வாக்காளர் பலி

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில், வாக்காளர் ஒருவர் கொல்லப்பட்டார்.
 | 

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலின் இடையே சிக்கி வாக்காளர் ஒருவர் கொல்லப்பட்டார். 

மக்களவை 3வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.  பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். 

இந்நிலையில்,  மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

முர்ஷிதாபாத் மாவட்டம் பாலிகிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.

இதில், வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றிருந்த தியாருல் கலாம் என்ற வாக்காளர் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார். ராணி நகரில் உள்ள வாக்குச் சாவடியில் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதால் வாக்காளர்களிடையே பீதி ஏற்பட்டது. 

newstm.in


.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP