மேற்கு வங்கம் : பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல்

மேற்கு வங்க மாநிலத்தில் 6வது கட்ட மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 | 

மேற்கு வங்கம் : பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல்

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தலில் 6-ஆவது கட்டமாக 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம், காஹத்தால் என்ற தொகுதியில் பாஜகவின் சார்பில் பாரதி கோஷ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் தனது வாக்கினை பதிவு செய்ய வாக்குச்சாவடிக்கு சென்றபோது அங்கிருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெண் தொண்டர்கள் பாரதி கோஷை தாக்கினர். மேலும் அவர் வந்த வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பாரதி கோஷ், "திரிணாமுல் காங்கிரஸ் பெண் தொண்டர்கள் கேஷ்பூர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. மேலும் என்னை அடித்து உதைத்து எனது வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளேன்" என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP