நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றால் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வோம்: அமித் ஷா

மக்களவை, மாநிலங்களவை என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக பெரும்பான்மை பெருமானால் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
 | 

தற்போதைய சூழலில் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடையாது. இப்போதைய மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்றாலும், அடுத்து அமையவுள்ள புதிய மக்களவையிலும் பெரும்பான்மை கிடைக்குமா என்பது தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே தெரிய வரும்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் தரம்பூரில் அமித் ஷா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எங்களுக்கு பெரும்பான்மை கிடைக்குமானால் 370-ஆவது பிரிவை ரத்து செய்வோம் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஏற்கெனவே கூறியிருக்கிறோம். இதைச் செய்வதன் மூலமாக காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பது நிரந்தரமாகிவிடும்’’ என்றார். 

தேசப்பாதுகாப்பை மோடி அரசு மட்டுமே உறுதி செய்ய முடியும் என்றும், அவரது ஆட்சியில் இந்தியா வல்லரசு ஆகும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP