4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 4 கட்டத் தேர்தலாக நடைபெறும் ஒடிஸாவில் இன்று முதலாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 | 

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது

ஆந்திரா, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து, ஒருசில மாநிலங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடைபெறுகிறது. அந்த வகையில், ஆந்திரா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 4 கட்டத் தேர்தலாக நடைபெறும் ஒடிஸாவில் இன்று முதலாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

ஆந்திராவில் மொத்தம் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளும், சிக்கிம் மாநிலத்தில் 32 சட்டப்பேரவைத் தொகுதிகளும் உள்ளன. அருணாசலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் 3 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். மீதமுள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிஸாவில் 147 தொகுதிகள் உள்ள நிலையில் இன்று 28 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP