ராஜ்நாத் சிங், மாயாவதி உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் வாக்களித்தனர் 

மக்களவை தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோ தாெகுதியில் இருந்து போட்டியிடும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள ஒரு வாக்குச்சாவடியில் இன்று காலை தன் வாக்கை பதிவு செய்தார்.
 | 

மக்களவை தேர்தலுக்கான, 5ம் கட்ட வாக்குப்பதிவு, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உ.பி., மாநிலம் லக்னோ தொகுதியில், பா.ஜ.,வேட்பாளராக களம் இறங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்குள்ள ஓர் வாக்குச்சாவடியில் இன்று காலை தன் வாக்கை பதிவு செய்தார். 

ராஜ்நாத் சிங், மாயாவதி உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் வாக்களித்தனர் 

அதே போல், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், லக்னோ இன்று வாக்களித்தார்.  இவர்களைப் போல், வி.ஐ.பி.,க்கள் பலரும் இன்று தங்கள் வாக்கை பதிவு செய்தனர். 

ராஜ்நாத் சிங், மாயாவதி உள்ளிட்ட வி.ஐ.பி.,க்கள் வாக்களித்தனர் 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் ரதோர், தன் மனைவியுடன் சென்று வாக்களித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அவரது மனைவியுடன், ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஹசாரிபாக்கில் இருந்து தான், அவரது மகனும் மத்திய அமைச்சருமான ஜெயந்த் சின்ஹா பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP