அமித் ஷாவின் பேரணியில் வெடித்த வன்முறை... திரிணாமூல் காங்கிரஸ் கைவரிசை?

மேற்கு வங்க மாநிலத்தில், மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பாஜக சார்பில் கொல்கத்தாவில் இன்று மாலை பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் கட்சியின் தேசியத் தலைவரான அமித் ஷா பங்கேற்றார்.
 | 

அமித் ஷாவின் பேரணியில் வெடித்த வன்முறை... திரிணாமூல் காங்கிரஸ் கைவரிசை?

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, கொல்கத்தாவில் இன்று பங்கேற்ற பிரம்மாண்ட பேரணியில் கலவரம் வெடித்தது. இதனால், கொல்கத்தா பல்கலைக்கழக வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது.

மேற்கு வங்க மாநிலத்தில், மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 19 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, பாஜக சார்பில் கொல்கத்தாவில் இன்று மாலை பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் கட்சியின் தேசியத் தலைவரான அமித் ஷா பங்கேற்றார்.

பல்லாயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்ற இப்பேரணி, கொல்கத்தா பல்கலைக்கழக வளாகத்தை நெருங்கியபோது, அங்கு நுழையவாயிலில் கூடியிருந்த மாணவர்கள் கூட்டம், பாஜகவின் பேரணிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதுடன், அமித் ஷாவுக்கு எதிராகவும் கோஷமிட்டுள்ளது.

இதற்கு பாஜக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருதரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. ஒருவரையொருவர் கற்கள், பாட்டில்களை வீசி தாக்கி கொண்டதையடுத்து மோதல் வன்முறையாக மாறியது. இதில், அமித் ஷாவின் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறையாளர்களை போலீஸார் தடியடி கொண்டு கலைத்து, ஒருவழியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அமித் ஷாவின் பேரணியில் வெடித்த வன்முறை... திரிணாமூல் காங்கிரஸ் கைவரிசை?

இந்த வன்முறை சம்பவத்தில், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் செல்வாக்குடன் உள்ள  திரிணாமூல் காங்கிரஸ் மாணவர் அணியின் கைவரிசை உள்ளது. அதனால் தான் மாநில போலீஸாரும் மாணவர்களுக்கு உதவியாக செயல்பட்டுள்ளனர் என்று  பாஜக தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

"மேற்கு வங்க மாநில மக்கள் மத்தியில் பாஜகவுக்கு நாளுக்கு நாள் பெருகிவரும் ஆதரவை கண்டு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் விரக்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக தான் அவர்கள் இன்று வன்முறையை அரங்கேற்றியுள்ளனர். இதற்கு இத்தேர்தலில் மேற்கு வங்க மக்கள், அவர்களுக்கு தக்கப் பாடம் புகட்டுவார்கள்" என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக, சிலரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ள கொல்கத்தா போலீஸார், மேலும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கொல்கத்தா வன்முறை சம்பவம் தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினர், தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று சந்தித்து பேசியுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP