தேர்தல் நடத்தை விதிமீறல்: பிரபல சாமியார் மீது வழக்குப் பதிவு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக, பிரபல சாமியார் கம்ப்யூட்டர் பாபாவுக்கு எதிராக, மத்திய பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 | 

மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்கை ஆதரித்து, கம்ப்யூட்டர் பாபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அவர் பிரசாரம் செய்ததாகவும், நடத்தை விதியை மீறிய அவர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும், மாற்றுக் கட்சியினர் புகார் தெரிவித்தனர். 

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, கம்ப்யூட்டர் பாபாவுக்கு எதிராக, மத்திய பிரதேச மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP