மீண்டும் வசுந்தராவின் ஆட்சி - அமித் ஷா உறுதி

ராஜஸ்தானில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவுபெறுகிறது. இந்நிலையில், மீண்டும் வசுந்தரா தலைமையில் பெரும்பான்மை அரசு அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா.
 | 

மீண்டும் வசுந்தராவின் ஆட்சி - அமித் ஷா உறுதி

ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு மீண்டும் அமையும் என்று பா.ஜ.க. தலைவர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார். அங்கு, இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுபெறுகிறது. இந்நிலையில், ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

மொத்தம் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரசாரங்களில் இறங்கியுள்ளன. அந்த வகையில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று ஜெய்ப்பூருக்கு சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியல் மற்றும் ஜாதி அடிப்படையிலான அரசியலை மக்கள் புறக்கணித்திருப்பதாகவும், வசுந்தரா ராஜே தலைமையில் மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ.க. அரசு அமையும் என்றும் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், புலந்தேஷ்வரில் கடந்த தினங்களில் நடைபெற்ற வன்முறை சம்பவம் துரதிருஷ்டமானது என்று அமித் ஷா குறிப்பிட்டார். அதுகுறித்து விசாரணை நடத்துவதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் குழுவின் அறிக்கை வெளிவரும்போது உண்மை என்னவென்பது தெரியவரும் என்றார் அவர்.

புலந்தேஷ்வரில் பசுவதை நடைபெற்றதாக செய்தி பரவியதையடுத்து, அங்கு வன்முறை ஏற்பட்டது. அதில், காவல்துறை அதிகாரி ஒருவரும், மற்றொரு நபரும் கொல்லப்பட்டனர். அதுகுறித்து உத்தரப் பிரதேச அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP