ஜம்மு - காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது: அமித் ஷா

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
 | 

ஜம்மு - காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது: அமித் ஷா

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தில் இறுதியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி வருகிறார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். 

இது தொடர்பான ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, மசோதா மீதான விவாதம் காலை முதலே நடைபெற்று வருகிறது. 

சற்றுமுன் மக்களவையில் பேசிய அமைச்சர் அமித் ஷா, "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள இந்திய பகுதிகளை மீட்க வழிவகை கிடைத்துள்ளது. அரசியல் சாசன பிரிவு 370 இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்தது. எனவே, அரசியல் சாசன பிரிவு 370 இன்றோடு முடிவுக்கு வந்து விடும் என்று நம்புகிறேன். 

காஷ்மீர் பிரச்னையை ஐ.நாவுக்கு கொன்டு சென்றது யார்? ஜவாஹர்லால் நேரு தான். மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை சரியா? தவறா? என்பதை வரலாறு முடிவு செய்யட்டும். ஆனால், ஒன்று மட்டும் சொல்கிறேன். எதிர்காலத்தில், காஷ்மீர் பிரச்னை குறித்த விவாதத்தின் போது பிரதமர் மோடி தான் மக்களால் நினைவு கூறப்படுவார். 

ஜம்மு காஷ்மீர் தற்போதைய நிலைமைக்கு யூனியன் பிரதேசமாக செயல்படும். காஷ்மீரில் நிலைமை சீரடைந்த பின்னர் மீண்டும் ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும்  மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.  இதனால் அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்காது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. எனவே வதந்திகளை   மக்கள் நம்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP