எந்த சூழ்நிலையிலும் நாட்டை விட்டுக் கொடுக்க முடியாது: பிரதமர் மோடி பேச்சு

எதை விடவும் நாடு உயர்வானது என்பதில் நம்பிக்கை உடையவர்கள் நாம். அதனால் தான், எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள், தங்கள் குடும்பத்தை விட நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுள்ளனர்.
 | 

எந்த சூழ்நிலையிலும் நாட்டை விட்டுக் கொடுக்க முடியாது: பிரதமர் மோடி பேச்சு

ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற இடத்தில், பிரதமர் நரேந்திர மாேடி பேசியதாவது: ‛‛எதை விடவும் நாடு உயர்வானது என்பதில் நம்பிக்கை உடையவர்கள் நாம். அதனால் தான், எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள், தங்கள் குடும்பத்தை விட நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதை மகிழ்ச்சியுடன் ஏற்றுள்ளனர். 

அப்படிப்பட்ட வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கம் நன்மை செய்யும் பணியில் மட்டுமே இந்த அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காகவே, ஒன் ரேங்க், ஒன் பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். இதன் மூலம், ஆயிரக்கணக்கான முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் பயன் அடைந்துள்ளனர். 

நாட்டு மக்கள் பாதுகாப்புடன் வாழ நம் வீரர்களின் தியாகமே காரணம். அவர்களுக்கு நான் மீண்டும் தலை வணங்குகிறேன். எந்த சூழ்நிலையிலும், எதற்காகவும், யாருக்காவும், இந்த நாட்டை விட்டுக் கொடுக்க முடியாது. எதை விடவும் இந்த நாடு முக்கியமானது. வீரர்களின் அயராத உழையப்பாலும், வீரத்தாலும் இந்த நாடு பாதுகாப்பாக உள்ளது’’ இவ்வாறு அவர் பேசினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP