ஐக்கிய அரபு எமிரகத்தின் பாதுகாப்பு அமைச்சர் இந்தியா வருகை!

ஐக்கிய அரபு எமிரகத்தின் பாதுகாப்பு அமைச்சர் முகமது அஹமது அல் போவார்டி அல் ஃபலாசி, இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பின் பேரில் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
 | 

டெல்லி வந்துள்ள ர் முகமது அஹமது அல் நேற்று இந்திய பாதுகாப்பு அமைச்சர்  நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். இரு அமைச்சர்களும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு பரிமாற்றங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பேச்சு நடத்தினார்கள்.  இந்தச் சந்திப்பின்போது, பல தரப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு பிரச்சினைகள் குறித்து விவாதித்த அமைச்சர்கள், மேம்படுத்தப்பட்ட ராணுவங்களுக்கு இடையிலான பரிவர்த்தனை, பயிற்சி, ராணுவ மருத்துவம் மற்றும் பாதுகாப்பு தொழில்துறை உறவுகள் ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று கூறினர்.

ஐக்கிய அரபு எமிரக பாதுகாப்பு இணையமைச்சர் இன்று  (17.10.18) பெங்களுருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், விமானம் மற்றும் கணிணி அமைப்புகள் சோதனை நிறுவனம் ஆகியவற்றுக்குச் சென்று பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP