பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு ஓடியவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டும்: வெங்கையா நாயுடு

பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு ஓடியவர்களை அந்தந்த நாட்டிடம் ஒப்படைப்பதற்கு தேவையான வழிமுறையை ஐக்கிய நாடுகள் மற்றும் பிற பல மட்டத்திலான அமைப்புகள் வகுக்க வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
 | 

இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு(சிட்டி) நடத்திய மாநாட்டில் பேசிய அவர் மேலும் பேசியதாவது:  
ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களுக்கு தான் சுற்றுபயணம் மேற்கொண்டபோது சந்தித்த அனைத்து தலைவர்களும் இந்தியாவின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் பாராட்டியதாக கூறினார். இந்தியாவின் வளர்ச்சியில் சர்வதேச நாடுகள் பெருமளவு அக்கறை கொண்டிருப்பதாக குடியரசுத் தலைவர் கூறினார்.

அதிகமான மூலப்பொருள்கள், திறமையான மனித வளம், உற்பத்தி போட்டித்திறன், நெசவு, பதப்படுத்துதல் மற்றும் ஆடை உற்பத்தி வசதிகள் போன்ற பல வசதிகளை கொண்ட இந்தியாவிற்கு நவீன முறைகள் கொண்ட பாரம்பரிய தொழிலாளர்கள் தனி சிறப்பு சேர்க்கின்றனர். நமது பரவலான திறன்களை உலகிற்கு எடுத்துக்காட்டுவதோடு மட்டும் அல்லாமல் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் நாம் சர்வதேச தலைமையாக மாறவேண்டும், என்று அவர் கூறினார்.

ஜவுளித் துறையில் இந்தியாவின் பண்டைய பெருமையை மீண்டும் கொண்டுவர, தேவையான திறன்கள், முதலீடுகள் மற்றும் சந்தையை உருவாக்கி ஜவுளி தொழிலை நவீனமயமாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

உலகமே நான்காவது தொழில் புரட்சியை நோக்கி செல்லும் நிலையில் தகவல் தொழில்நுட்ப துறையில் நமக்கு இருக்கும் அனுபவத்தைக் கொண்டு அதை ஜவுளித்துறையை முன்னேற்ற சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் ஜவுளித்துறையில் நாம் முன்னோடியாக திகழ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் வங்கி கணக்குகள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாவதையும் ஐக்கிய நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP