'ட்விட்டர் நாயகி' சுஷ்மாவின் கடைசி ட்வீட் இது தான்!

மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையாநாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 | 

'ட்விட்டர் நாயகி' சுஷ்மாவின் கடைசி ட்வீட் இது தான்!

மத்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சுஷ்மாவை பொறுத்தவரை சமூக வலைத்தளமான ட்விட்டரின் மூலமாக மக்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டவர்.  ட்விட்டரில் அதிகம் பின்தொடர்பவர்களை(1.32 கோடி) கொண்ட இந்தியாவின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை அவரையேச் சாரும். ட்விட்டரின் மூலமாக இந்திய மக்கள் மட்டுமின்றி, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கும் தீர்வும் தந்தவர். இதனாலே பாகிஸ்தானில் உள்ள மக்களும் இன்று அவரது மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர். 

இந்நிலையில், நேற்று மறைவுக்கு முன்னதாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் இந்நாளுக்காக தான் காத்திருந்தேன். பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி" என காஷ்மீர் விவகாரம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அவரது கடைசி ட்வீட்டும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP