Logo

எம்.பி., தேர்தலுடன் எம்.எல்.ஏ., தேர்தலும் நடைபெறவுள்ள மாநிலங்கள் இவைதான்!

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரம், அருணாசல், சிக்கிம், ஒடிஸா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற மக்களவைக்கு ஏப்ரல் 11 - ஆம் தேதி முதல் மே மாதம் 19 தேதி வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
 | 

எம்.பி., தேர்தலுடன் எம்.எல்.ஏ., தேர்தலும் நடைபெறவுள்ள மாநிலங்கள் இவைதான்!

நாடாளுமன்ற மக்களவைக்கு ஏப்ரல் 11 - ஆம் தேதி முதல் மே மாதம் 19 தேதி வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18 -ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன், தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்டுள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இதேபோன்று, நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரம், அருணாசல், சிக்கிம், ஒடிஸா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

மேலும், உத்தரப் பிரதேசம், குஜராத், பிகார், மேகாலயா, நாகலாந்து உள்ளிட்ட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 34 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதேசமயம், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில், மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, அந்த மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP