மத்திய அமைச்சருக்கு அறை விட்ட இளைஞர்!!

மேடையில் இருந்து கீழே இறங்கிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலேவை திடீரென தள்ளிவிட்டு இளைஞர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். இதையடுத்து, பாதுகாவலர்களும், காவல்துறையினரும் அந்த இளைஞரை இழுத்துச் சென்று கைது செய்தனர்.
 | 

மத்திய அமைச்சருக்கு அறை விட்ட இளைஞர்!!

மகாராஷ்டிர மாநிலத்தில், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அதாவாலேவை இளைஞர் ஒருவர் திடீரென தள்ளவிட்டு கன்னத்தில் அறைந்தார். அவர் எதற்காக இதைச் செய்தார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் ராம்தாஸ் அதாவாலே, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறையின் இணையமைச்சராக இருக்கிறார். மகாராஷ்டிர மாநிலம், அம்பர்நாத் நகரில் நேற்றிரவு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கி வந்த ராம்தாஸ் அதாவாலேவை இளைஞர் ஒருவர் திடீரென கீழே தள்ளிவிட்டு கன்னத்தில் அறைந்தார்.

இதையடுத்து, ராம்தாஸின் ஆதரவாளர்கள் விரைந்து வந்து அவரை மீட்டனர். அங்கிருந்த பாதுகாவலர்களும், காவல்துறையினரும் அந்த இளைஞரை வெளியே இழுத்துச் சென்று கைது செய்தனர். தாக்குதல் நடத்திய இளைஞரும் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்தான் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் எதற்காக இதைச் செய்தார் என்ற காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP