கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும் ஒன்றாகவே இருக்கும்: அருண் ஜெட்லி

கருத்துக்கணிப்பு முடிவுகள் போல தான் தேர்தல் முடிவுகள் இருக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 | 

கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும் ஒன்றாகவே இருக்கும்: அருண் ஜெட்லி

கருத்துக்கணிப்பு முடிவுகள் போல தான் தேர்தல் முடிவுகள் இருக்கும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது சமூக வலைத்தள பக்கத்தில்,  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின் உண்மைத்தன்மை தொடர்பாக எங்களில் சிலரிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின் முடிவுகள் ஒன்றுபோல் உள்ளபோது, தேர்தல் முடிவுகளும் அதே போல் தான் அமையும் என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ஓட்டு யாருக்கு போடுவது என முடிவு செய்வதற்கு முன், தேசநலனை வாக்காளர்கள் முக்கியமாக கருதி உள்ளார் எனவும், மக்கள் ஒரே மாதிரியாக வாக்களிக்கும்போது, அது அலையை உருவாக்கியுள்ளதாகவும் அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், குஜராத் மாநில துணை முதலமைச்சர் நிதின் பட்டேல்,  கருத்துக்கணிப்பில் கூறியதை விட அதிக தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெறவுள்ளதாக கூறியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP