அதிக ஓட்டு பெற்ற கட்சி தோல்வி; குறைந்த ஓட்டு பெற்ற கட்சி வெற்றி: ஆந்திராவில் தான் இந்த கூத்து!

இப்படி அதிக ஓட்டுகள் பெற்ற கட்சி இரண்டாம் இடத்திலும், அதை விட குறைவான ஓட்டுகள் பெற்ற கட்சி முதல் இடத்தையும் பிடித்த வித்தியாசமான முடிவுகள், ஆந்திராவில் கடந்த தேர்தலில் அரங்கேறின. இன்று ஒரே கட்டமாக, மக்களவை, சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
 | 

அதிக ஓட்டு பெற்ற கட்சி தோல்வி; குறைந்த ஓட்டு பெற்ற கட்சி வெற்றி: ஆந்திராவில் தான் இந்த கூத்து!

நாட்டின், 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில்,  17வது மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட ஓட்டுப் பதிவு, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அத்துடன், ஆந்திராவில் சட்டசபை பொதுத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது. 

இந்த மாநிலத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஜெகன்மாேகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. 

இந்த மாநிலத்தில் மாெத்தம், 25 மக்களவை தொகுதிகளும், 175 சட்டசபை தொகுதிகளும் உள்ளன. கடந்த, 2014ம் ஆண்டு நடைபெற்ற, மக்களவை தேர்தலில், மாெத்தம் பதிவான வாக்குகளில், 45 சதவீத ஓட்டுகள் பெற்ற ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி, வெறும் எட்டு மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 

அந்த கட்சியை விட, ஐந்து சதவீதம் குறைவாக, அதாவது, 40 சதவீத ஓட்டுகள் பெற்ற தெலுங்கு தேசம் கட்சி, 15 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட, பா.ஜ., ஏழு சதவீத ஓட்டுகள் பெற்று, இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. 2.2 சதவீதம் ஓட்டுகள் பெற்ற காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. 

அதே போல், சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவில், 44.9 சதவீதம் ஓட்டுகள் பெற்ற தெலுங்கு தேசம் கட்சி, 102 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த கட்சியை விட, வெறும், 0.3 சதவீத ஓட்டுகள் குறைகவாக  பெற்ற ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், 67 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பா.ஜ., இரண்டு இடங்களிலும், பிற சுயேட்சைகள், இரு இடங்களிலும் வெற்றி பெற்றன. 

சட்டசபை தேர்தலிலும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை. 

இப்படி அதிக ஓட்டுகள் பெற்ற கட்சி இரண்டாம் இடத்திலும், அதை விட குறைவான ஓட்டுகள் பெற்ற கட்சி முதல் இடத்தையும் பிடித்த வித்தியாசமான முடிவுகள், ஆந்திராவில் கடந்த தேர்தலில் அரங்கேறின. இன்று ஒரே கட்டமாக, மக்களவை, சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 

இம்முறை எப்படிப்பட்ட முடிவுகள் வெளியாக உள்ளன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP