மேகதாது அணை பிரச்னை - இரு மாநில முதல்வர்களை அழைத்துப் பேச மத்திய அரசு முடிவு

கர்நாடக முதல்வர் குமாரசாமி, நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, மேகதாது அணை பிரச்னை குறித்து இரு மாநில முதல்வர்களை அழைத்துப் பேசுவதாக நிதின் கட்கரி உறுதியளித்தார்.
 | 

மேகதாது அணை பிரச்னை - இரு மாநில முதல்வர்களை அழைத்துப் பேச மத்திய அரசு முடிவு

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சிப்பதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இரு மாநில அரசுகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

கர்நாடக முதல்வர் குமாரசாமி, நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, மேகதாது அணை பிரச்னை குறித்து இரு மாநில முதல்வர்களை அழைத்துப் பேசுவதாக நிதின் கட்கரி உறுதியளித்தார் என்று கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசின் செய்தித்தொடர்பாளர் மேலும் கூறுகையில், “முதல்வர் குமாரசாமி உடனான சந்திப்பின்போது, மேகதாது அணையால் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும் என்பதை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புக் கொண்டார். மேலும், இரு மாநில முதல்வர்களை அழைத்துப் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாகவும் கட்கரி உறுதியளித்தார்’’ என்றார்.

மேகதாது அணைப் பிரச்னையை முன்வைத்து நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடுத்துள்ளது. இத்தகைய சூழலில், மத்திய அரசு இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP