மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது

59 தொகுதிகளில் 7-ஆம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதன் மூலம் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
 | 

உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 13 தொகுதிகளிலும், பாஞ்சாப்பில் 13, மேற்குவங்கத்தில் 9, பீகார், மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகுதிகளிலும், ஹிமாச்சப்பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3, சண்டிகரில் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதேபோல், தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மேலும், 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவும் நிறைவு பெற்றது.

மக்களவை தேர்தல், இடைத்தேர்தல்,  13 வாக்குச் சாவடிகளில் பதிவான மொத்த வாக்குகளும் வரும் 23-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.
 
newstm.in  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP