பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் : எதிர்க்கட்சிகளை கலாய்த்த மோடி!

தேர்தல் சமயத்தில் ஏன் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று சிலர் கேள்வி எழுப்புவார்கள் போலும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 | 

பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் : எதிர்க்கட்சிகளை கலாய்த்த மோடி!

தேர்தல் சமயத்தில் ஏன் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர் என்று சிலர் கேள்வி எழுப்புவார்கள் போலும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப்படையினரின் தேடுதல் வேட்டையின்போது, 2 பயங்கரவாதிகள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன. 

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் பகுதியில் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, "காஷ்மீரில் இன்று 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தேர்தல் நடக்கும்போது, ஏன் பயங்கரவாதிகள கொல்லப்படுகின்றனர் என சிலர் கேள்வி கேட்பார்கள் போல. இந்திய எல்லையை தாக்க பயங்கரவாதி ஆயுதங்களுடன் வருகிறான் என்றால், அப்போதும்கூட அவனை எதிர்த்து தாக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்க வேண்டுமா என்ன?" என்று மோடி ஆவேசமாக கேள்வியெழுப்பினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP