தீவிரவாதத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது- பிரதமர் மோடி

கடுமையான நடவடிக்கைகளால் மட்டுமே தீவிரவாதத்தை அகற்ற முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 | 

தீவிரவாதத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது- பிரதமர் மோடி

கடுமையான நடவடிக்கைகளால் மட்டுமே தீவிரவாதத்தை அகற்ற முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலம் பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், எதிர்கட்சிகள் தீவிரவாத தாக்குதல்களை வெகு சாதாரணமாக எடுத்து கொண்டுள்ளன.

ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலின் போது எத்தனை அப்பாவிகள் உயிரிழக்கிறார்கள். அவர்கள் என்ன பாவம் செய்தனர். இதையெல்லாம் உணராமல் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை கிண்டல் செய்து எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

நான் இம்மாநிலத்தில் எனது கடைசி தேர்தல் கூட்டத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மீண்டும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று உங்களுக்காக ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வேன்.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா, சீக்கிய கலவரம் குறித்து அவரிடம் கேட்ட போது, அவர் "நடந்தது நடந்து விட்டது, அதற்கு இப்போது என்ன செய்ய வேண்டும் அல்லது முடியும்  என்று அலட்சியமாக தெரிவித்ததிலிருந்தே அக்கட்சியின் கொள்கை எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி அந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசிய போது குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP