மக்களவை சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட பத்து கட்சிகள் ஆதரவு!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட பிஜு ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து மக்களவையில் இன்று தீர்மானம் நிறைவேற்ற உள்ளது.
 | 

மக்களவை சபாநாயகராக பாஜகவின் ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட பத்து கட்சிகள் ஆதரவு!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட பிஜு ஜனதா தளம், சிவசேனா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து மக்களவையில் இன்று தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து 17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்தொடரில் நேற்று முதல், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.பிக்களாக பதவியேற்று வருகின்றனர். இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 

இதையடுத்து, நாளை புதிய சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதி எம்.பியான ஓம் பிர்லா தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதையடுத்து, ஓம் பிர்லா சபாநாயகராக தேர்தெடுக்கப்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றவுள்ளது. அதன்படி, பிரதமர் மோடி, மத்திய பாஜக அமைச்சர்கள், பிஜு ஜனதா தளம், சிவசேனா, தேசிய மக்கள் கட்சி, மிசோ தேசிய முன்னணி, அகாலி தளம், லோக் ஜனசக்தி, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், அதிமுக, அப்னா தளம் ஆகிய கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் ஓம் பிர்லாவை சபாநாயகராக தேர்ந்தெடுக்க வேண்டும் என முன்மொழித்துள்ளன. 

பாரதிய ஜனதா கட்சி சார்பாக மக்களவை சபாநாயகர் வேட்பாளரா போட்டியிட உள்ள நபரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் மட்டுமின்றி, அக்கூட்டணியில் இடம் பெறாத கட்சிகளும் தாமாகவே முன்வந்து அமைதியாக, ஆர்ப்பாட்டம் இன்றி, எவ்வித அரசியல் பேரமும் செய்யாமல் ஆதரிப்பது இதுவே முதல் முறை என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP