பொற்கோவிலில் வழிபாடு செய்த நடிகர் சன்னி தியோல்

பிரபல நடிகரும் பாஜக வேட்பாளருமான சன்னி தியோல் இன்று பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
 | 

பொற்கோவிலில் வழிபாடு செய்த நடிகர் சன்னி தியோல்

பிரபல நடிகரும் பாஜக வேட்பாளருமான சன்னி தியோல் இன்று பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்தரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகனும் நடிகருமான சன்னி தியோலுக்கு பாஜக சார்பில் குர்தாஸ்பூரில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று குர்தாஸ்பூரில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.

முன்னதாக அவர் இன்று காலை அம்ரிஸ்தரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் உடன் சென்றனர்.  

சன்னி தியோலின் தந்தை தர்மேந்திரா, அவருடைய சகோதரரும் நடிகருமான பாபி தியோலும் வேட்பு மனு தாக்கலின் போது உடன் செல்வார்கள் என கூறப்படுகிறது.

குர்தாஸ்பூரில் வினோத் நடிகர்  கன்னா பாஜக சார்பில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பதவியில் இருந்த போது 2017ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP