கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்!

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நாளை காலை 11 மணிக்கு தம்மை வந்து சந்திக்குமாறு சபாநாயகர் ரமேஷ் குமார் சம்மன் அனுப்பியுள்ளார்.
 | 

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்!

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நாளை காலை 11 மணிக்கு தம்மை வந்து சந்திக்குமாறு சபாநாயகர் ரமேஷ் குமார் சம்மன் அனுப்பியுள்ளார். 

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆளும் குமாரசாமி அரசுக்கு எதிராக, காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் 16 பேர் (காங்கிரஸ் - 13, மஜத -3) தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது கடந்த இரு நாட்களாக(ஜூலை 18 & 19) விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று(ஜூலை 22) திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தம்மை வந்து சந்திக்குமாறு சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று அவர்களுக்கு  சம்மன் அனுப்பியுள்ளார். அதன்படி, நாளை காலை 11 மணிக்கு தம்மை நேரில் சந்தித்து விளக்கமளிக்குமாறு அவர் கூறியுள்ளார். 

அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் - மஜத எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP