இத்தாலி பெண்மணியாகவே அறியப்படும் சோனியா காந்தி - பா.ஜ.க. எம்.பி. பேச்சு

இந்தியாவில் பலமுறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டாலும் இத்தாலி பெண்மணியாகவே சோனியா காந்தி அறியப்படுகிறார் என்று தெரிவித்தார் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர். ஊழல் வழக்கில் தொடர்புடைய கிறிஸ்டியன் தெரிவித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
 | 

இத்தாலி பெண்மணியாகவே அறியப்படும் சோனியா காந்தி - பா.ஜ.க. எம்.பி. பேச்சு

இந்தியாவில் பலமுறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பின்னரும் கூட இத்தாலி பெண்மணியாகவே சோனியா காந்தி இன்னும் அறியப்படுகிறார் என்று தெரிவித்தார் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு வழக்கில், பிரிட்டனைச் சேர்ந்த இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேலிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியபோது, ‘இத்தாலி பெண்மணி’, ‘இத்தாலி பெண்மணியின் மகன்’ ஆகிய வார்த்தைகளை அவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோரது பெயர்களைத்தான் கிறிஸ்டியன் மைக்கேல் அவ்வாறு குறிப்பிட்டதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்தது. 

இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் இதுகுறித்து கூறுகையில், “கிறிஸ்டியன் மைக்கேல் எதுவும் சொன்னாரா, இல்லையா என்பது முக்கியமல்ல. ஆனால், இத்தாலி பெண்மணி யார், இத்தாலி பெண்மணியின் மகன் யார், திருமதி காந்தி யார் என்பதெல்லாம் அவர்களுக்கு தெரியும். இந்தியாவில் பலமுறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட பிறகும்கூட, ஒட்டுமொத்த உலகுக்கும் அவர் இன்னும் இத்தாலி பெண்மணியாகவே அறியப்படுவது துரதிருஷ்டவசமானது’’ என்று தெரிவித்தார்.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அதில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார் எழுந்ததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP