Logo

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வரின் மகன்!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் அம்மாநில முதல்வர் கமல்நாத்தின் மகன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
 | 

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்வரின் மகன்!

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் அம்மாநில முதல்வர் கமல்நாத்தின் மகன் போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் நோக்கத்தில் பாஜகவும், ஆட்சியை கைப்பற்றும் எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் போட்டியிடும் 12 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.  

இதில், சிந்த்வாரா தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் கமல்நாத்தின் மகன் நகுல் நாத் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜய் சிங் ராகுல், ஷித்தி தொகுதியிலும், அருண்யாதவ், கான்த்வா தொகுதியிலும் களமிறங்குகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP