பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் இறங்கும் அவரது அண்ணன் ‘சோமா மோடி’

கடந்த நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் இந்த முறை பா.ஜ.க.வுக்கு கூடுதலான வெற்றியை பெற்றுத் தர களமிறங்கும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் குழுவினருக்கு பிரதமர் மோடியின் சகோதரர் சோமா மோடி தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லவுள்ளார்.
 | 

பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் இறங்கும் அவரது அண்ணன் ‘சோமா மோடி’

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பெருவாரியான வாக்குகளை சேகரிக்கும் நோக்கத்துடன், 5,000 வெளிநாடுவாழ் இந்தியர்களை கொண்ட குழுவினர், நாடெங்கிலும் உள்ள 545 தொகுதிகளிலும் களமிறங்குகின்றனர். அந்தக் குழுவுக்கு, பிரதமர் நரேந்திர மோடியின் மூத்த சகோதரரும், ‘குளோபல் இந்தியன்ஸ் பார் பாரதிய விகாஸ்’ என்ற அமைப்பின் துணை தலைவருமாகிய சோமா மோடி, தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லவுள்ளார்.

இதேபோன்று, 3,000 வெளிநாடுவாழ் இந்தியர்கள் அடங்கிய குழுவினர், கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றினர். இவர்கள் உள்ளூர் தன்னார்வர்களின் நிதியுதவியுடன் இயங்குபவர்கள். இந்த முறையும், மோடியை பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதே அவர்களதுநோக்கமாம்.

இதுகுறித்து சோமா மோடி கூறுகையில், “ 2014இல் பெரும்பான்மை பலத்துடன் அரசு அமைந்தாலும்கூட, நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கியதாலும், பல தடைகளை ஏற்படுத்தியதாலும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முழுமையாக இயங்க முடியாமல் போனது. இதைத் தடுப்பதற்கான ஒரே வழி, 2014ஐ காட்டிலும் இந்த முறை கூடுதலான தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான்.

அரசுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனால், கூட்டணிக் கட்சிகள், மாநிலக் கட்சிகளின் நெருக்கடிகளுக்கு அரசு பணிந்து செல்ல வேண்டியிருக்கும். இதனால், உறுதியான முடிவுகளை எடுக்க முடியாது. ஆகவே, 545 தொகுதிகளிலும் வாக்காளர்களை ஜாதி, மதம், இன பாகுபாடுகளைக் கடந்து தேசத்தின் நலனை கருத்தில் வைத்து வாக்களிக்குமாறு வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரசாரம் செய்வார்கள்” என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP