ராஜீவை பற்றி நான் பேசக்கூடாதா? : மோடி ஆவேசம்

ராகுல் காந்தி என்னை பார்த்து என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்; ஆனால் நான், அவரது தந்தை பற்றி எதுவும் பேசக்கூடாதா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வியெழுப்பி உள்ளார்.
 | 

ராஜீவை பற்றி நான் பேசக்கூடாதா? : மோடி ஆவேசம்

ராகுல் காந்தி என்னை பார்த்து என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்; ஆனால் நான், அவரது தந்தை பற்றி எதுவும் பேசக்கூடாதா? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வியெழுப்பி உள்ளார்.

மக்களவைத் தேர்தலையொட்டி,  ஹரியாணா மாநிலம், குருஷேத்திரத்தில் பிரதமர்  நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அதன் பின்னர் அவர், பிரபல ஆங்கில நாளிதழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் மோடி கூறியது:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, என்னை பார்த்து கண்டமேனிக்கு கேள்விகளை கேட்டு வருகிறார். அத்துடன், என்னைப் பற்றி அவதூறுகளையும் பரப்பி வருகிறார். இந்த நிலையில் தான் அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் ஃபோபர்ஸ் ஊழல் குறித்து கேள்வியெழுப்பினேன்.

நாட்டின் பிரதமரான என்னைப் பார்த்து அவர்கள் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். ஓர் முன்னாள் பிரதமர் குறித்து நான் மட்டும் எதையும் பேசக்கூடாதா?
ஃபோபர்ஸ் பீரங்கி ஊழல்,  போபால் விஷவாயு கசிவு விவகாரம், சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் போன்றவற்றில் காங்கிரஸ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா? என  மோடி ஆவேசமாக கேள்வியெழுப்பினார்.

ஃபோபர்ஸ் பிரங்கி ஊழல் காரணமாக. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நம்பர் 1 ஊழல்வாதியாக இறந்தார் என்று பிரதமர் மோடி அண்மையில் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP