மூத்த அரசியல் தலைவரின் கிண்டல் பேச்சு - முதல்வர் ஆவேசம்

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் உடல் அமைப்பு குறித்து மூத்த அரசியல் தலைவரான சரத் யாதவ் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களை முன்வைத்தார். இதையறிந்து ஆவசேமடைந்த வசுந்தரா ராஜே அவரை கடுமையாக கண்டித்துள்ளார்.
 | 

மூத்த அரசியல் தலைவரின் கிண்டல் பேச்சு - முதல்வர் ஆவேசம்

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் உடல் அமைப்பு குறித்து மூத்த அரசியல் தலைவரான சரத் யாதவ் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனங்களை முன்வைத்தார். இதற்கு வசுந்தரா ராஜே மிகக் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. முன்னதாக, லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் நிறுவனரும், மிக மூத்த அரசியல் தலைவருமான சரத் யாதவ், பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, வசுந்தராவின் உடல் எடையை விமர்சிக்கும் வகையிலான கருத்துக்களை கூறியிருந்தார். குறிப்பாக “வசுந்தராவை ஓய்வெடுக்க விடுங்கள்; அவர் சோர்வாகியிருப்பார்’’ என்று கிண்டலான தொனியில் பேசியிருந்தார்.

அவரது இந்தப் பேச்சு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. புகார் அளித்தது. இந்நிலையில், இன்று தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வசுந்தரா ராஜே, சரத் யாதவின் கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து வசுந்தரா கூறுகையில், “சரத் யாதவின் கருத்துக்களைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். என்னை காயப்படுத்திவிட்டதாக உணருகிறேன். அவர் பெண்களை அவமதித்திருக்கிறார். சரத் யாதவின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக முக்கியமானதாகும். இன்றைய இளைஞர்களுக்கு இப்படியொரு முன்னுதாரணத்தைதான் சரத் யாதவ் தெரிவிக்க விரும்புகிறாரா?” என்றார் அவர்.

இதற்கிடையே, நகைச்சுவைக்காக மட்டுமே அப்படி பேசியதாகவும், வசுந்தராவை அவமதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் சரத் யாதவ் விளக்கம் இன்று விளக்கம் அளித்தார். வசுந்தரா தனக்கு நல்ல தோழி, அவரை இதற்கு முன்பு நேரில் சந்தித்தபோதும் உடல் எடை அதிகரித்து வருவது குறித்து சுட்டிக்காட்டியிருக்கிறேன் என்றும் சரத் யாதவ் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP