பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை: வெங்கையா நாயுடு

பள்ளி மாணவர்களைச் சமூகப் பணிகளில் ஈடுபடுத்தும் வகையில் பாடத் திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் இதனால் அவர்களது மனத்தில் சமூக ஆர்வம், சமூக அக்கறை ஏற்படுவதற்கு உதவும் என்று வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
 | 

பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை: வெங்கையா நாயுடு

பள்ளி மாணவர்களைச் சமூகப் பணிகளில் ஈடுபடுத்தும் வகையில் பாடத் திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் இதனால் பள்ளிப் பருவத்திலேயே சமூகப் பணிகளில் ஈடுபடும் வகையில் சிறுவர்களை ஈடுபடுத்துவது அவர்களது மனத்தில் சமூக ஆர்வம், சமூக அக்கறை ஏற்படுவதற்கு  உதவும் என்று  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற 2018ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல், பேரிடர் பாதிப்பைக் குறைத்தல், பெண்கள் - குழந்தைகள் நலன், அமைதி, அஹிம்சைக்காகப் பாடுபடுதல் ஆகியவற்றுக்காகப் பாடுபட்ட நான்கு பேருக்கு ஜம்னாலால் பஜாஜ் விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசு தலைவர் பேசியதாவது, "ஜம்னாலால் பஜாஜ் இந்தியாவின் அடிப்படை தத்துவமான பகிர்தல் அக்கறை செலுத்துதல், மகளிர்க்கு அதிகாரமளிக்கப் பாடுபடுதல், சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்கள் முன்னேறப் பாடுபடுதல், தீண்டாமை ஒழிப்பு, கதருக்கு உயர்வு அளித்தல் ஆகியவற்றுக்காகப் பாடுபட்டார் ஜம்னாலால் பஜாஜின், வாழ்க்கையும் பணிகளும் மக்களிடையில் மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் ஏற்படுத்துவதற்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளன.  அந்த வகையில் பள்ளி மாணவர்களைச் சமூகப் பணிகளில் ஈடுபடுத்தும் வகையில் பாடத் திட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP