Logo

வயநாட்டில் ராகுலை எதிர்க்கும் சரிதா நாயர்.. தேர்தலில் போட்டி!

கேரளாவில் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிட உள்ளார்.
 | 

வயநாட்டில் ராகுலை எதிர்க்கும் சரிதா நாயர்.. தேர்தலில் போட்டி!

கேரளாவில் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து கடந்த ஆட்சியின்போது அந்த மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்து உம்மண் சாண்டி தன்னிடம் லஞ்சம் பெற்றார் என்று குற்றம்சாட்டியுள்ள சூரியத்தகடு முறைகேடு புகழ் சரிதா நாயர் போட்டியிட உள்ளார். 

கேரளாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய மோசடி குற்றச்சாட்டுதான் சோலார் பேனல் மோசடி. சோலார் பேனல்களை வாங்கி விற்பதில் முறைகேடு நடந்து இருக்கிறது. இதில் மக்களை பலர் ஏமாற்றி இருக்கிறார்கள். பல கோடிகளை அப்போதைய காங்கிரஸ் அரசு சுருட்டி இருக்கிறது என்று 2013ல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. 

இதில் முக்கிய குற்றவாளிகளாக சரிதா நாயரும் அவரின் காதலர் பிஜு ராதாகிருஷ்ணனும் கைது செய்யப்பட்டார்கள். இந்த ஊழலில் முன்னாள் கேரளா காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி பெயரும் அடிபட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் பரபரப்பு திருப்பமாக சரிதா நாயர், காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் என்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டார்கள். பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்கள் என்று புகார் அளித்தார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்களவை தேர்தலில் தற்போது சரிதா நாயர் போட்டியிடுகிறார். ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில் இவர் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். ராகுல் காந்தி தான் கொடுத்த புகார்களுக்கு செவிமடுக்கவில்லை. அதனால் அவருக்கு எதிராக போட்டியிட போகிறேன் என்று அவர் கூறி உள்ளார்.

அதேபோல் இவர் எர்ணாகுளம் தொகுதியிலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். எர்ணாகுளம் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக ஹிபி ஈடன் போட்டியிடுகிறார். இவர் மீதுதான் சரிதா முதன்முதலாக பாலியல் தொல்லை புகார் அளித்தார். அதனால் அவருக்கு எதிராக இப்போது போட்டியிடுகிறார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP