வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி

வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனினும், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
 | 

வாரணாசி தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், அவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் ஆணையம் கோரிய ஆவணங்களை உரிய நேரத்தில் சமர்ப்பிக்காத காரணத்தால், தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. எனினும், இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, வாரணாசியில் தேஜ் பகதூர் யாதவ் சுயேட்சையாக மனு தாக்கல் செய்திருந்தார். அவர் ராணுவத்தில் இருந்தபோது உணவின் தரம் குறித்த குற்றச்சாட்டுகளை தெரிவித்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டவர். இந்நிலையில், தேஜ் பகதூர் யாதவையே, வேட்பாளராக சமாஜ்வாதி கட்சி அறிவித்தது. அதே சமயம், அவர் பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான விவகாரகத்தில் உரிய விளக்கங்களை தருமாறு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு தேஜ் பகதூர் யாதவ், உரிய நேரத்தில் விளக்கம் அளிக்காத காரணத்தினால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP