பிரபல பெண் வேட்பாளரை ஆபாசமாக சித்திரித்த சமாஜ்வாதி தலைவர் - கடும் சர்ச்சை

உத்தர பிரதேச மாநிலத்தின் ராம்பூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகையும், பாஜக வேட்பாளருமான ஜெய பிரதா குறித்து, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான் தெரிவித்துள்ள ஆபாசமான கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பிரபல பெண் வேட்பாளரை ஆபாசமாக சித்திரித்த சமாஜ்வாதி தலைவர் - கடும் சர்ச்சை

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ராம்பூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பிரபல நடிகையும், பாஜக வேட்பாளருமான ஜெய பிரதா குறித்து, சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான் தெரிவித்துள்ள ஆபாசமான கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் சமாஜ்வாதி கட்சியில் இருந்தவரான ஜெயப்பிரதா தற்போது பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆசம் கான், சமாஜ்வாதி கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ராம்பூரில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஜெயப்பிரதாவின் பெயரை குறிப்பிடாமல், ஆசம் கான் விமர்சித்தார். “உங்களுக்குத்தான் அவரை (ஜெயப்பிரதா) பற்றி தெரிந்து கொள்ள 17 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆனால், அவர் காக்கி நிற உள்ளாடைதான் அணிந்துள்ளார் என்பதை நான் 17 நாள்களிலேயே கண்டுபிடித்துவிட்டேன்’’ என்றார் ஆசம் கான்.

பொதுவாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடையான காக்கி நிற பேண்ட்-ஐ மையமாக வைத்து பாஜகவினரை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதுண்டு. ஆசம் கானும் அந்த தொனியில் விமர்சித்தாரா என்ற கேள்வி எழுகிறது. ஆனாலும், பெண் வேட்பாளர் குறித்து ஆபாசமான மொழி நடையில் ஆசம் கான் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, தான் அவ்வாறு பேசவில்லை என்றும், அதை நிரூபித்தால் போட்டியில் இருந்து விலகத் தயார் என்றும் ஆசம் கான் தெரிவித்துள்ளார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP