திக்விஜய் சிங்கை எதிர்த்து சாத்வி பிரக்யா சிங் போட்டி?

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து, சாத்வி பிரக்யா சிங்கை நிறுத்துவதன் மூலமாக, அவரது ஹிந்து விரோத போக்கிறகு பதிலடி கொடுக்க முடியும் என்ற ரீதியில் பாஜக பரிசீலித்து வருகிறது.
 | 

திக்விஜய் சிங்கை எதிர்த்து சாத்வி பிரக்யா சிங் போட்டி?

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து, ஹிந்து மத பெண் துறவி சாத்வி பிரக்யா சிங்கை களமிறக்குவது குறித்து பாஜக பரிசீலித்து வருகிறது.

கடந்த 2008-ஆம் ஆண்டில் மாலேகானில் நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்த வழக்கில் சாத்வி பிரக்யா சிங் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். ஆனால், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு அவர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அதே சமயம், ஹிந்துத்துவ கொள்கைகள் குறித்து மிக தீவிரமான விமர்சனங்களை முன்வைப்பவர் திக்விஜய் சிங். ஹிந்து தீவிரவாதம் என்று சர்ச்சைக்குரிய வகையில் கடந்த காலங்களில் பேசியவர்.

ஆக, திக்விஜய் சிங்கிற்கு எதிராக சாத்வி பிரக்யா சிங்கை நிறுத்துவதன் மூலமாக, அவரது ஹிந்து விரோத போக்கிறகு பதிலடி கொடுக்க முடியும் என்ற ரீதியில் பாஜக பரிசீலித்து வருகிறது. எனினும், சாத்வியை வேட்பாளராக நிறுத்தினால், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கக் கூடும் என்பதையும் பாஜக பரிசீலனை செய்து வருகிறது.
newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP